எஜமானரின் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நாய்: சமூக வலைதளங்களில் வைரல்

டெல்லி: இந்தியாவில் டூவீலரில் போகும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வது என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது. டூவிலரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் என்பது குறைந்தபட்ச பாதுகாப்பு என்றாலும் இது குறித்து விழிப்புணர்வு  மக்கள் மத்தியில் முழுமையாக ஏற்படவில்லை. தற்போது பெரும்பாலான இடங்களில் டூவீலரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் அபாராதம் விதித்து வருகின்றனர். இச்சட்டத்தை கடுமையாக கடைபிடிக்கும் படி அவர்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பலர் போலீசாருக்கு பயந்தாவது ஹெல்மெட் அணிந்து பயணம் செய்கின்றனர். ஆனால் அப்பொழுதும் சிலர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பயணம் செய்துதான் வருகின்றனர். சில இடங்களில் ஹெல்மெட் போடாதவர்கள் மீது  போலீசார் நடவடிக்கை என்ற பெயரில் சில அத்துமீறல் செய்யும் சம்பவங்களும் நடந்துதான் வருகிறது. இதற்கிடையே, எஜமானரின் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நாய் குறித்து டெல்லி போலீஸ் வெளியிட்ட  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி போக்குவரத்தின் டுவிட்டர் பக்கத்தில், நல்ல பையன் இந்த நாய், இதுபோல இருக்க வேண்டும் என ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நாயின் வீடியோவை பதிவிடப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்.  தற்போது, இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image