கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று கம்பம்மெட்டு ரோடு பகுதிகளில் உள்ள கூட்டுறவு விற்பனை கூடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டன இதில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உண்டான தொகை முழுவதும் நேரடியாக ECS மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தினங்களுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் அரசு அதிக நெல் ஊக்கத் தொகையுடன் (சன்னரகம்) குவிண்டால் ஒன்றுக்கு (1905) (பொது ரகம்) குவிண்டால் ஒன்றுக்கு (1865) விதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மண்டல மேலாளர் சீதாராமன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கே. எம் .அப்பாஸ் மற்றும் விவசாயிகள் வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.