மதுரை
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் இன்று கொழும்பு செல்ல முயன்ற பயணியிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் ஆய்வாளர் விக்டர் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சென்னை வில்லிவாக்கம் பாலாம்பிகை நகரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (வயது 42) என்ற நபர் கொழும்பு செல்வதற்காக வந்திருந்தார் .அவரை குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் போலி என தெரியவந்தது.
குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணையில் அவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி அய்யாவு என்பவரின் மகன் விஜயசங்கர் (வயது 42) என தெரியவந்தது.
இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பாஸ்போட் விண்ணப்பித்திருந்த போது இவரது மனைவி பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்த புகாரின் பேரில் இவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கிருஷ்ணன் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது அங்குள்ளவர்களின் ஏற்பாட்டின் பேரில் சென்னை முகவரியில் அவருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனை அடுத்து குடியேற்றத் துறை அதிகாரிகள் கிருஷ்ணனை மதுரை பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்