நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை மேலப்பாளையத்தில் டிசம்பர் 29ஆம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார்.