அவர்கள் தங்களது நன்றியை தெரிவிக்கும் விதத்தில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தனபதி கூறும்போது, "தமிழக அரசிற்கும், தமிழக ஆளுநருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்தோம். அப்போது, "காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டே இதற்கான பணிகள் துவங்கும்" என உறுதியளித்தார்.
அதை மெய்ப்பிக்கும் விதத்தில், சட்டப்பேரவையில் இனிப்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளப்படியே, காவிரி -குண்டாறு திட்டப் பணிகளை இந்த ஆண்டே துவக்கி, எங்களின் 70 ஆண்டு கனவை நனவாக்க வேண்டும்" என தனபதி தெரிவித்தார்.