இத்தாலியிலும் பரவியது கொரோன வைரஸ் - ஒருவர் பலி

" alt="" aria-hidden="true" />


 


இத்தாலி:

கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இதில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இத்தாலி சுகாதார மந்திரி ராபார்ட்டோ கூறும்போது, “வெனேடோ பகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மத கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image