புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் பி.சூரியபிரபு தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்-அகாடமி இணைந்து கல்லூரி மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவ, மாணவிகள் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒருநாள் வேலைவாய்ப்புக் காண வழிகாட்டுதல் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா கண்ணன் தலைமை ஏற்று பேசினார். ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் பி.சூரியபிரபு பேசும்போது மாணவர்கள் பட்டபடிப்பு முடிந்தபின்பு எந்தெந்த அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு எழுதலாம். என்று விளக்கி கூறினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பி வேல்முருகன் தமிழ்நாடு பொது தேர்வானயம் குழு நடத்தும் குருப், 1,2,3,4 பற்றி மாணவ மாணவிகளுக்கு  விளக்கி கூறினார். அறந்தாங்கி வருவாய் அலுவலர் கவாவி பேகம் போட்டி தேர்வு பற்றி பேசினார், அறந்தாங்கி எஸ்.எஸ் எஸ். அகாடமி இயக்குநர் எஸ்.சுரேஷ் போட்டி தேர்வின் மூலம் மாணவர்கள் அரசு பணிக்கு செல்லும் வழிமுறைகளை கூறினார். போட்டி தேர்வில் வெற்றிபெற்று கிராம நிர்வாக அலுவலராக தேர்ச்சி பெற்ற அனிதா என்ற மாணவிதான் தான் போட்டி தேர்வில் வெற்றிபெற்ற அனுபவத்தை மாணவ மாணவிகளிடம் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜீவரெத்தினம் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கணிணி அறிவியல்துறை பேராசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் நிறைவாக வணிகவியல் துறைத் தலைவர் என்.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


" alt="" aria-hidden="true" />

Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image