குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.

 

தூத்துக்குடியில் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு பல்சமய பேரியக்கம் சார்பாக குடியுரிமை சட்டமசோதாவை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை ஜமாத்துல் உலமா தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள்

 

இவ்விழாவில்  ஜமா அத்துல் உலமா சபை மாநகர செயலாளர் சம்சுதீன் , முன்னால் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி , மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குநர் வழக்கறிஞர்  ஹென்றி தீபன்,   (இஸ்லாமிய அழைப்பாளர் முகமது உசேன்,   ஜமாஅத்துல் உலமா  சபை தூத்துக்குடி மாநகர செயலாளர் சம்சுதீன்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில  துணைத்தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், தமிழக வாழ்வுரிமை கட்சி. தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

 

 

இந்த மாபெரும் கண்டண பொதுக்கூட்டத்தை நடத்திட தூத்துக்குடி காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையை அனுகி இன்றைய பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்று இந்த பொதுக்கூட்டத்தை சலசலப்பு ஏதுமின்றி சிறப்புடன் நடத்தி முடித்துள்ளனர். மேலும் இக்கூட்டத்திற்கு ஆயிரம் பெண்கள் உட்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image
மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.